Tuesday, March 20, 2012

அத்வானி பாதையில் பைப் குண்டு இலங்கையில் பிலால் மாலிக் பதுங்கல்

Tuesday, March 20, 2012
மதுரை::மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, அக்., 28ல், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பயணிக்க இருந்த ஆலம்பட்டி ஓடைப்பாலத்தில், பைப் குண்டுகள் வைத்த வழக்கில் தேடப்படும் பிலால்மாலிக், இலங்கையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஊழலுக்கு எதிராக மதுரையில் இருந்து,"மக்கள் விழிப்புணர்வு யாத்திரையை' அத்வானி மேற்கொண்டார். திருமங்கலம், ஆலம்பட்டி வழியாக, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல திட்டமிட்டிருந்தார். அவர் பயணிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன், ஆலம்பட்டி ஓடைப்பாலத்தில் சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
இவ்வழக்கில், மதுரை நெல்பேட்டை அப்துல்லா,26, இஸ்மத்,22, கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான, "போலீஸ்' பக்ருதீன், பிலால்மாலிக்கை ஐதராபாத், சென்னை, மும்பையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தேடினர்.
இந்நிலையில், பிலால்மாலிக் இலங்கையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பொருட்கள் கடத்தல் தொடர்பாக இலங்கை நாட்டைச் சேர்ந்த சிலருடன் பிலால்மாலிக்கிற்கு தொடர்பு இருந்தது. இதன் அடிப்படையில், அவர் அங்கு பதுங்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். இவரை பிடிக்க விரைவில் இலங்கைக்கு தனிப்படை செல்கிறது.

No comments:

Post a Comment