Saturday, March 3, 2012

இன்டர்நெட் நிறுவனங்கள் வேவு பார்க்கின்றன ஸ்மார்ட்போன் கேமரா.. உஷார்!

Saturday, March 03, 2012
லண்டன்::ஸ்மார்ட்போன்கள் வழியாக பரிமாறப்படும் மெசேஜ், போட்டோக்கள் மட்டுமின்றி அதன் கேமராவில் பதிவாகும் காட்சிகளைக்கூட இன்டர்நெட் நிறுவனங்கள் பார்க்க முடியும் என்று எச்சரிக்கின்றனர் இணையதள நிபுணர்கள். நவீன கேமரா, எம்எம்எஸ், இன்டர்நெட், கேமரா, ஜிபிஎஸ் உள்பட ஏராளமான வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் புதிது புதிதாக அறிமுகமாகின்றன. வசதிகள் போலவே ஆபத்துகளும் இதில் அதிகம் என்கின்றனர் இணையதள நிபுணர்கள். இதுதொடர்பாக இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ், டெய்லி மெயில் இதழ்களில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்மார்ட்போன் தயாரிக்கும் கம்பெனி மற்றும் அதில் பயன்படுத்தப்படும் ஆபரேடிங் சிஸ்டத்துக்கு ஏற்ப, அப்ளிகேஷன்கள் மாறுபடுகின்றன. ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் மூலம் பரிமாறப்படும் மெசேஜ்கள், போட்டோக்களை பேஸ்புக், யாஹூ, ஃப்ளிக்கர் இணையதளங்கள் பார்க்க முடியும். தங்களது சர்வரில் அவற்றை பதிவு செய்யவும் முடியும். ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை உருவாக்கும்போதே இப்படி ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களிடம் ஒப்புதலும் பெற்று விடுகின்றனர். டுவிட்டர் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் பயன்படுத்துபவரின் அட்ரஸ் புக்கில் இருக்கும் இமெயில் முகவரிகள், போன் நம்பர்களை அவர்களுக்கு தெரியாமலேயே சர்வரில் பதிவு செய்வதை டுவிட்டர் நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது. சில கேமரா அப்ளிகேஷன்களை பயன்படுத்தி வீட்டையோ, பெட்ரூமையோ நீங்கள் படம் எடுத்தால் அதில் பதிவாகும் காட்சிகளைக்கூட இணையதள நிறுவனங்கள் பார்க்க முடியும். சர்வரில் பதிவு செய்யவும் முடியும். எனவே, ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதில் உள்ள அப்ளிகேஷன்களை பயன்படுத்தும்போது விதிமுறைகளை நன்கு படித்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கையாகபயன்படுத்துங்கள் என்கின்றனர் இணையதள நிபுணர்கள்.

No comments:

Post a Comment