Saturday, March 24, 2012

நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது!

Saturday, March 24, 2012
இலங்கை::ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கை மனித உரிமை ஆர்வலர்கள், இலங்கை குழுவினரால் மிரட்டப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஜெனீவா சென்றிருந்த இலங்கை மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கை குழுவினரால் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக ஐநா மனித உரிமை கவுன்ஸில் குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டதாக ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

71 பேர் கொண்ட இலங்கை குழுவில் அமைச்சர் ஒருவர் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கையில் முன்நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கூறிய குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் இன்று (24) நிராகரித்துள்ளது.

No comments:

Post a Comment