Thursday, March 22, 2012

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு!

Thursday, March 22, 2012
காஷ்மீர்::ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகள் மீது நோக்கி பாகிஸ்தான் படையினர் நேற்று இரவு துப்பாக்கியால் சுட்டனர். போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் படையினர் சுட்டதால், பதிலுக்கு நாங்களும் சுட்டோ ம். சுமார் 1 மணி நேரம் இந்த துப்பாக்கிச் சண்டை நீடித்தது என இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்தியத் தரப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் இவ்வாறு அடிக்கடி இந்திய பகுதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வருகிறது. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பும் நோக்கத்தில் இவ்வாறு செய்து வருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment