Thursday, March 22, 2012இலங்கை::கொழும்பு - கிரேன்ட்பாஸ் வெலிகொட 225ம் இலக்க தோட்டப் பகுதியில் ஒருவர் சுட்டுக் கெலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று இரவு 08 - 08.30ற்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
உக்கு பாட்டியா என அறியப்படும் 30 வயதுடைய பிரசன்ன குமார என்பரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கிரேன்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment