Saturday, March 03, 2012இலங்கை::2ம் இணைப்பு - (புலி)கூட்டமைப்பின் பத்மினியிடம் சிவனேசனின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் குறித்து விசாரணை:-
வன்னியில் கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசனின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் தொடர்பான தகவல்களை தம்மிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் கேட்டிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தருமான திருமதி;.பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் தலைமையகத்திற்கு திருமதி;.பத்மினி சிதம்பரநாதன் விசாரணைக்கென அழைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக கடந்த 28ம் திகதியே விசாரணைக்கு வருமாறான அழைப்பு தமக்கு கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் எனினும் அது கால தாமதமாக கிடைத்தமையினால் இன்றைய தினம் விசாரணைக்கு சமூகமளித்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சிவனேசன் 2008ம் ஆண்டின் பங்குனி 6ம் திகதி கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.அவரது மரணம் நடந்து நான்கு வருடங்களை அண்மித்து வருகின்ற நிலையில் இப்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் திட்டமிட்டு சிக்க வைக்கும் ஓர் உத்தியாகவே பார்க்கப்படுகின்றது.
சிவனேசனின் இறுதி கிரியையில் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
No comments:
Post a Comment