Wednesday,March,21,2012சென்னை::தமிழகத்தில் 13,300 காவலர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள் மாநகர, மாவட்ட சேமநல படை பிரிவுக்கு ஆண்கள் 4284 பேரும், பெண்கள் 1835 பேரும் என மொத்தம் 6119 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு ஆண்கள் 6033 பேரும், பெண்கள் 56 பேரும் என மொத்தம் 6099 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் ஆண்கள் மட்டும் 377 பேரும், தீயணைப்போர் 791 பேரும் என மொத்தம் 13,320 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12,152 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வில் 5 சதவீத பணியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் நேரடியாக நிரப்பப்படும். இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள் மொத்த காலி பணியிடத்தில் 10 சதவீதம் ஓய்வுபெற்ற, மரணமடைந்த, வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கான வயது தகுதி 1.7.2012 அன்று 18 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். 24 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். பி.சி., எம்.பி.சி. பிரிவினர் 26 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் 29 வயது வரை தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி. எழுத்து தேர்வு, உடல்திறன் போட்டி மற்றும் சிறப்பு மதிப்பெண் ஆகியவற்றில் பெறும் மொத்த உயர்ந்த பட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலும், மற்றும் விண்ணப்பதாரர் தெரிவித்துள்ள பதவி விருப்ப முன்னுரிமைபடியும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப வகுப்புவாரி விகிதாச்சாரத்தின்படி மாவட்ட, மாநகர சேமநலப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, இரண்டாம்நிலை சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்போர் பதவிக்கு முறையே தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பங்கள் தபால் நிலையங்களில் இன்று முதல் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்ரல் 23-ம் தேதிக்குள் தலைவர், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம், சென்னை -2 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். எழுத்து தேர்வு ஜூன் 24ம் தேதி நடக்கிறது. மேலும் விவரங்கள் www.tn.gov.in/tnusrb என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment