Monday, February 27, 2012சென்னை::சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை ஐகோர்ட் இன்று விலக்கிக்கொண்டது. காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, புதுச்சேரி சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயேந்திரர், சிறப்பு கோர்ட் நீதிபதி ராமசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஆடியோ டேப் வெளியானது. இதனால் புதுச்சேரியில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என வக்கீல் சுந்தரராஜன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை ஐகோர்ட் நீதிபதி சுகுணா விசாரித்து சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார்.
தடையை நீக்கக் கோரி காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த சுந்தரேச அய்யர், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சுகுணா விசாரித்து, டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து மனுவை நீதிபதிகள் கே.என்.பாட்ஷா, பால்வசந்தகுமார் விசாரித்தனர். மனுதாரர் சுந்தரேச அய்யர் சார்பாக வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் சார்பாக வக்கீல்கள் முத்துக்குமாரசாமி, சுரேஷ்குமார் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கில் இன்று தீ£ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு விவரம்:
ஜெயேந்திரர் டேப் விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இருந்தாலும் இந்த விவகாரத்தில் சென்னை மாநகர சைபர் கிரைம் போலீஸ் உதவி கமிஷனர் சுதாகர் விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புதுவை நீதிபதி ராமசாமி, வேறு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டிருப்பதால் புதுச்சேரியில் நடந்து வரும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.
No comments:
Post a Comment