Thursday, February 16, 2012இலங்கை::மூன்று கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நலீன் பெரேரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான மனுவும் இவற்றுள் உள்ளடங்கியுள்ளது.
2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குகன் முருகானந்தன் மற்றும் லலித் குமார் வீரராஜ் ஆகியோர் தொடர்பில் ஏனைய இரண்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எக்கெனலிகொட தொடர்பிலான மனுவின் சாட்சி விசாரணை ஹோமாகம நீதவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அந்த நீதிமன்ற விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிந்துகொள்வதற்காக இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எக்னலிகொடவின் மனு தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் சாட்சியமளிப்பதற்கு நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸுக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்தார்.
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைகளை நிறைவுசெய்து அது தொடர்பில் ஏப்ரல் 26 ஆம் திகதி மீண்டும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த இரண்டு மனுக்களினதும் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த பொலிஸ் மாஅதிபர் நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் வருகைதந்திருந்தார்.
குகன் மற்றும் வீரராஜ் ஆகிய இருவரினதும் மனுக்கள் தொடர்பில் பிரதிவாதிகளுக்கு இதுவரையில் நோட்டீஸ் கிடைக்கப்பெறாமையால், அவருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்திரவிட்டது.
இந்த இரண்டு மனுக்களிலும் யாழ் இராணுவ கட்டளைத் தளபதி, இராணுவத் தளபதி, அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை இம்மாதம் 29 ஆம் திகதி நடத்துவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது..
பாரத்த லக்ஷ்மன் கொலை சம்பவம்; சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க கோரிக்கை!
பாரத்த லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று பிணை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பாதுகாவலர் மற்றும் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் ஏழு சந்தேகநபர்களுக்காக இந்த பிணை மனு தாக்கல் செய்யப்பட்டு்ள்ளது.
இதில் சட்டமா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளார். இதற்கமைய பிரதிவாதிகளுக்கு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment