
இலங்கை::இலங்கைக்கெதிரான போர் குற்றச்சாட்டுக்களிலிருந்து அதனை பாதுகாக்க தயாராகும் நாடுகளது உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று யாழ்.குடாநாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த செவ்வாய் கிழமை சென்று திரும்பியுள்ளது. இரண்டு நாள் விஜயமாக சென்றிருந்த இக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் படைத்தயலைமையின் விருந்தினராக தங்கியிருந்து விட்டு திரும்பியுள்ளனர். யாழ்.மாவட்ட படைகளின் கட்டளை தளபதி மேஜர்.ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவை பலாலியில் சந்தித்து குழுவினர் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக படைத்தள அதிகாரி பிரிகேடியர் சுமித் அத்தபத்த விளக்கி கூறியிருந்ததாக பலாலி படைத்தலைமை ஊடகங்களுக்க விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பங்களாதேஸ் நாட்டின் உயரதிகாரி கொமடோர் முடசர் நசீர் ஈரான் நாட்டின் கேணல் கூரம் லஜ்வாடி மற்றும் ரஸ்யா இராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகளான ஈகோர் பவ்லோவ் மற்றும் கேணல் யுரோஸ்வ் உள்ளிட்ட பலரும் இக்குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.
குறிப்பாக விடுதலைப்புலிகளது முன்னாள் போராளிகளென கூறப்படும் சிலருக்கு ஊர்காவற்துறை பகுதியில் வழங்கப்பட்டு வரும் நண்டு வளர்ப்பு பயிற்சித்தி;டடம் தொடர்பாகவும் அழைத்து சென்று காண்பிக்கப்பட்டது.
வழமை போன்று நல்லூர் கோவில் மற்றும் பொதுசன நூலகம் உள்ளிட்ட இடங்களுக்கும் குழுவினர் பயணம் செய்திருந்தனர். நாளை வெள்ளிக்கிழமை பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இதே இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அதே இடங்களுக்கு சர்வதேச நாடுகளது படையதிகாரிகளும் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment