Tuesday, February 14, 2012இலங்கை::அப்பட்டமான மனித உரிமை மீறல், அடிப்படை உரிமை மீறல் மற்றும் ஜனநாயக உரிமை மீறல் ஆகியவற்றுக்கு காரணமான அரசாங்கம், சர்வதேசத்தின் முன்னால் இரட்டை வேடத்தை காண்பிப்பதாலேயே பாரதூரமான அழுத்தங்களும் ஜெனீவா மாநாட்டின் போதான இறுக்கமும் அதிகரித்திருப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
அந்நிய சக்திகள் இலங்கைக்குள் மூக்கை நுழைப்பதற்கு பாதையமைத்துக் கொடுத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமெரிக்காவிடம் மண்டியிட்டுக் கிடக்கின்றது.
உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் இலங்கை மண்ணில் வைத்தே இலங்கைக்கு எதிராக பேசுவாரென்றால் அதற்கான அதிகாரத்தையும் தைரியத்தையும் அரசாங்கமே வழங்கியிருக்கின்றது என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
No comments:
Post a Comment