Sunday, February 26, 2012
இலங்கை::புத்தளம், நாத்தாண்டிய மைலாவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த எதிரிகுலசேகர ருக்மல் ஹஷான் (வயது 42) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மேற்படி நபரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில் தனது 5 வயது மகளை உறவினர் ஒருவரின் வீட்டில் விட்டுவிட்டு மோட்டார் சைக்களில் பயணித்தபோதே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவரது உடலில் 4 இடங்களில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாகவும் 9மி.மி ரக துப்பாக்கியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment