Thursday, February 23, 2012இலங்கை::ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் இம்முறை இலங்கைக்கு எதிராக அமெரிக்காவே பிரேரணை முன்வைக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை சமர்பித்து, எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் எப்படியாவது அதனை நிறைவேற்ற அமெரிக்கா எண்ணியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை புலிகள் இயக்கத்தை தோற்கடித்தமைக்கு அமெரிக்கா இலங்கையை பழிவாங்க முயற்சிப்பதாக அமைச்சர் விமல் தெரிவித்தார்.
லிபியா, சூடான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நிலைக்கு இலங்கையையும் தள்ளுவது அமெரிக்காவின் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment