Monday, February 13, 2012

கடும்போக்குடைய இனவாதிகளின் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்-மஹிந்த அமரவீர!

Monday, February 13, 2012
இலங்கை::சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாதிகள் மீளவும் நாட்டில் போரை ஏற்படுத்த முயற்சிப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இந்த கடும்போக்குடைய இனவாதிகளின் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும். இந்த தேசத்தின் மீது பற்று கொண்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு, நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்த முயற்சிகளை தடுத்து மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த சில இனவாத சக்திகள் முயற்சிக்கின்றன. எந்தவொரு இன சமூகத்திற்கும் வரையறையற்ற அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இன சமூகத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கினால் ஏனைய இன சமூகங்களும் அதிகாரங்களை கோரக் கூடும். குறிப்பாக பெரும்பான்மை இனமான சிங்கள மக்கள் அதிகளவு அதிகாரங்களைக் கோரக் கூடும்.

எனவே, இனவாதிகளுக்கு அதிகாரங்களை வழங்காது நாட்டு மக்களுக்கு தேவையானதை மட்டுமே செய்ய வேண்டும் என மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment