Monday, February 27, 2012சென்னை::போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான கும்பல் தலைவன் அஜய் குமார் ராயின் கூட்டாளிகள் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
போலீசாரின் என்கவுன்டரில் பீகாரை சேர்ந்த வங்கி கொள்ளை கும்பல் தலைவன் அஜய் குமார் ராய் மற்றும் அவனது கூட்டாளிகள் 4 பேரும் பலியாகினர். கும்பல் தலைவன் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
மும்பை, கொல்கத்தா, சென்னை உள்பட நாடு முழுவதும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதன் மூலம் ரூ.1 கோடிக்குமேல் பணத்தை திரட்டி உள்ளனர். இந்த பணத்தை என்ன செய்தார்கள், எங்கு கொண்டு சென்றார்கள் என்று தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் அஜய் குமார் ராயின் கூட்டாளிகள் என்று கருதப்படும் குற்றவாளிகளின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
வடமாநில வங்கி கொள்ளை தொடர்பாக பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த சையது ஜாபர் சஹா பாபா நக்கூன் சஹா என்ற சோட்கான் (31), மும்பை காந்திவல்லியை சேர்ந்த மகேந்திரா ஜெரி டி சவுசா (23), மும்பை மல்லாட் பிரமானந்த்ராம் நாராயணன் துபே (36), அனிக்கட் ஜவன்ந்த் பிரப் (20), பீகாரை சேர்ந்த சோனு குமார் கோரக் கமல குமார் யாதவ் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். சுபோகாந்த், பீகாரை சேர்ந்த சுஜய் என்ற சுஜய்குமார் முனீசர் ராய், அபய்குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment