Monday, February 27, 2012இலங்கை::இன்று காத்தான்குடியில் புலிப்பயங்கரவாத அடிவருடிகளின் தேச விரோத செயல்களை கண்டித்து பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள்:-
எமது நாட்டில் கௌரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிரந்தர சமாதானத்தை குழப்பி மீண்டும் இந்த நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முனையும் சர்வதேச புலிப்பயங்கரவாதிகளின் அடிவருடிகளுக்கு எதிராக நாளை காத்தான்குடியில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவித்தல் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின் அனைத்து பள்ளிவாயல்களிலும் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவித்தல் உத்தியோகபூர்வமாக எமக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து அதனை வாசகர்களுக்காக கீழே தருகின்றோம்.
அஸ்ஸலாமு அழைக்கும் வறஹ்மதுல்லாஹி…
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, காத்தான்குடி நகரசபை, சுஹதாக்கள் ஞாபாகார்த்த நிறுவனம் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்
எமது நாட்டில் கடந்த 30 வருட காலம் புலிப்பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் பல லட்சம் உயிர்களையும், உடமைகளையும் இழந்து கொண்டிருந்த நிலையில் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டை பொறுப்பேற்று ஓரிரு வருடங்களுக்குள் பாசிச புலிப்பயங்கரவாதிகளை பூண்டோடு அழித்து எமது நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களையும் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ வழி சமைத்தார்.
இத்தகைய சமூகமான சூழலை பொறுத்துக்கொள்ள முடியாத சர்வதேச பயங்கரவாதிகள் இந்நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் இந்த நாட்டை குழப்ப நிலைக்கு உட்படுத்தி பழிவாங்க திட்டமிடுகின்றனர்.
புலிப்பயங்கரவாதிகள் எமது இனத்திற்கு எதிராக மேற்கொண்ட படுகொலைகள் சொத்து இழப்புகள் எல்லாவற்றையும் மூடி மறைத்து பழிவாங்க நினைக்கும் சர்வதேசத்திற்கு எமது ஊரில் பாசிச புலிகளால் மேற்கொண்ட அராஜகத்தை தெளிவுபடுத்தும் வகையிலும், கடல் கடந்த தமிழ் ஈழம் அமைத்து எமது சமூகத்திற்கு மீண்டும் தீங்கிழைக்க நினைக்கும் புலிப்பயங்கரவாதிகளின் அடிவருடிகளுக்கு பாரிய எதிர்ப்பை தெரிவிப்பதற்காகவும் நமதூர் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், பாடசாலைகள், வங்கிகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் மூடி 27-02-2012 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு புலிப்பயங்கரவாதிகளால் இனப்படுகொலை இடம்பெற்ற காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்மா பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள துஆ பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து பிரதேச செயலகம் வரை நடைபெற உள்ள மாபெரும் ஊர்வலத்திலும் அனைவரையும் கட்டாயம் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
ஏற்பாட்டுக்குழு-வஸ்ஸலாம்.
No comments:
Post a Comment