Wednesday,February 22,2012இலங்கை::இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேச சமூகத்தை இணங்கச் செய்ய முடியும் எனஅமைச்சர் மஹிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைஅமர்வுகளின் போது சர்வதேச சமூகத்தை திருப்திபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியும் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் உலகின் பலநாடுகளுடன் இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பாதகமானசூழ்நிலை ஏற்படக் கூடிய சாத்தியம் கிடையாது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அழுத்தங்களை முறியடிக்கும் நோக்கில் ராஜதந்திர முனைப்புக்கள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சவால்களை எதிர்நோக்க சில தந்திரோபாயங்களை பிரயோகிக்கத்திட்டமிட்டுள்ளதாகவும் அவை பற்றி தற்போதைக்கு கருத்து வெளியிட முடியாது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைஅமர்வுகளில் கலந்து கொள்வதற்கு பயணம் செய்வதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு அளித்த செவ்வியில்அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எதிராகதீர்மானம் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment