Sunday, February 26, 2012

என்கவுன்டர் வீட்டில் ஆய்வு நடத்த வந்த மனித உரிமை கழகத்தினர் விரட்டியடிப்பு : போலீசுடன் கடும் வாக்குவாதம்!

Sunday, February 26, 2012
சென்னை::என்கவுன்டர் நடந்த வீட்டை ஆய்வு செய்ய வந்த மனித உரிமை கழகத்தினரை பொதுமக்கள் விரட்டியடித்தனர். வேளச்சேரி வங்கி கொள்ளையர்கள் 5 பேர் கடந்த 23ம் தேதி அதிகாலை, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், என்கவுன்டர் நடந்த வீடு மற்றும் சம்பவ இடத்தை பார்வையிட இன்று காலை மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் மார்க்ஸ், கல்யாணி, சுகுமாறன், ஆராய்ச்சியாளர்கள் மதுமிதா, சந்திரா, மனிஷா உள்பட 20 பேர் வந்தனர். அவர்கள் ஏ.எல். முதலி தெருவில் நுழைந்தவுடன், Ôயாரையும் உள்ளே அனுமதிக்க முடியாதுÕ என்று பாதுகாப்பு பணியில் இருந்த கிண்டி இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், வெங்கடேசன் ஆகியோர் மறுத்தனர். அதற்கு, Ôநாங்கள் மனித உரிமை அமைப்பில் உள்ளவர்கள்Õ என்றனர். உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று இன்ஸ்பெக்டர்கள் கூறிவிட்டனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்புக்கும் நடந்த வாக்குவாதத்தை ஏ.எல். முதலி தெரு மக்கள் பார்த்தனர். உடனே ஏராளமானோர் அங்கு திரண்டனர். மனித உரிமை கழகத்தினரை பார்த்து, Ôஏன் இங்கு வந்தீர்கள், கொள்ளையர்களை போலீஸ் சுட்டுக் கொன்றதில் எந்த தவறும் இல்லை. வங்கியில் கொள்ளை அடிக்கும் போதும், மாணவன் கடத்தப்பட்ட போதும், நீங்கள் எல்லோரும் எங்கே சென்றீர்கள். இறந்தவர்கள் யாரும் நல்லவர்கள் இல்லை, ஒழுங்காக போய் விடுங்கள்Õ என்று மக்கள் சத்தம் போட்டனர். இதனால் பொதுமக்களுக்கும் மனித உரிமை கழகத்தினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும், தெருவுக்குள் நுழைய விடாமல் அவர்களை மக்கள் விரட்டினர். இதனால் வேறு வழியின்றி அவர்கள் கலைந்து சென்றனர். கமிஷனரை சந்திக்க முடிவு மக்கள் கழக பேராசிரியர் மார்க்ஸ் கூறுகையில், “வேளச்சேரி என்கவுன்டர் இடத்துக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. போலீஸ் கமிஷனர் திரிபாதியை போனில் தொடர்பு கொண்டோம். அவர் எங்களை நேரில் வர சொல்லியுள்ளார். இன்று மாலை அவரை சந்தித்து பேசுவோம். பிறகு என்கவுன்டர் நடந்த வீட்டுக்குள் சென்று ஆய்வு செய்வோம்ÕÕ என்றார்.

மற்றொருவர் முகவரி தெரிந்தது

வங்கி கொள்ளையர்கள் 5 பேரில் வினோத் குமார் முகவரி மட்டும் போலீசாருக்கு கிடைத்தது. மற்றவர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் வினய் பிரசாத் முகவரியும் கிடைத்துள்ளது. அவர் பீகார் மாநிலம், பாட்னா அருகே உள்ள நாலந்தாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இது குறித்து தமிழக போலீசார், பீகார் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment