Wednesday, February 22, 2012

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் அவசர அழைப்பின் பேரில்,கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், இலங்கை அதிபரை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்!

Wednesday,February 22,2012
இலங்கை::இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் அவசர அழைப்பின் பேரில்,கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், இலங்கை அதிபரை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்!

இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அவசர அழைப்பின் பேரில், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், சிறிலங்கா அரசுத் தலைவரை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்துகொள்ள வேண்டுமென, இலங்கை அரசுத் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த ராஜபக்சவின் இக்கோரிக்கையை, தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் முற்றாக நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை சுதந்திரக் கட்சிக்குமிடையில் இடம்பெற்று வருகின்ற பேச்சுக்களின் போது காத்திரமான முன்னேற்றங்களை அடையும் போதே நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுக்க முடியுமெ ன இரா.சம்பந்தன் அவர்கள், உறுதியாக தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறான முன்னேற்றங்கள் காணமல் நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் பங்கெடுப்பது அர்தமற்றது என இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு, இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரினை மையப்படுத்தி இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களில், இனநெருக்கடி குறித்தான பேச்சுவார்தைகளும் பிரதானமாகவுள்ளது.

இந்நிலையில், மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர், விரைவில் தொடங்கவிருக்கின்ற நிலையில், தன்மீதான அழுத்தங்களை தணிப்தற்கு, சிறிலங்கா கடும் முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனை, மகிந்த ராஜபக்சவினை அவசரமாக அழைத்துப் பேசியதன் பின்னணி இதுவாகவே இருக்க முடியுமென அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்

No comments:

Post a Comment