Wednesday,February 22,2012இலங்கை::வைத்தியர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி மரண அச்சுறுத்தல் விடுத்ததுடன் பின்னர் அங்கிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்களுக்கு பொலன்நறுவை மேல்நீதிமன்றம் 9 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் பொலன்நறுவை மேல் நீதிமன்ற நீதவான் அமேந்திர ராஜபக்ஸ முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை குற்றவாளிகளாக கண்டதை அடுத்தே நீதிமன்றம் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.
இது தவிர சந்தேகநபர்களுக்கும் 20 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் விதித்த நீதிமன்றம் அதனை செலுத்த தவறுகின்ற பட்சத்தில் மேலும் 7 வருடம் கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் முதலாவது சந்தேகநபர் வைத்தியரின் மனைவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக நிரூபணமானதை அடுத்து அதற்காக அவருக்கு மேலும் 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கே நீதிமன்றம் சிறைத்ததண்டனை வழங்கியது.
1997 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் மெதிரிகிரிய வைத்தியசாலையினட வைத்தியர ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாக பிரதிவாதிகள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment