Wednesday, February 8, 2012

குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகம் வவுனியாவில் திறக்கப்பட்டது!

Wednesday,February,08,2012
இலங்கை::குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வவுனியாவில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

வடமாகாணத்தில் திறக்கப்பட்டுள்ள அந்த திணைக்களத்திற்கான முதலாவது அலுவலகம் இதுவாகும்.

புதிய அலுவலகத்தின் மூலம் வட பகுதி மக்களுக்கு விரைவாகவும், இலகுவாகவும் கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

50 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த அலுவலகம், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.ஹேட்டியாராய்ச்சி மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment