Friday, February 10, 2012

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உலக வங்கி வதிவிட பிரதிநிதி சந்திப்பு!

Friday, February 10, 2012
இலங்கை::உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டயரிடோ கயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை வியாழக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.


இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் நிதி மற்றும் அபிவிருத்தி சட்ட நிபுணர் நாகவல்லி அண்ணாமலையும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வாவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment