Wednesday,February 22,2012இலங்கை::வடக்கில் பயங்கரவாதிகளினால் பாதுகாக்கப்பட்ட மண்ணை நாம் இன்று நாசப்படுத்தி கொண்டிருக்கின்றோம். நிறுவனங்கள் இலாபநோக்குடனேயே செயல்படுகின்றன. கிருமிநாசினிகள் பிரபாகரனை விடவும் மோசமானது என்று ஆளும்கட்சியின் எம்.பி. யான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பீடை கொல்லிகளைக் கட்டுப்படுத்தும் சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிரபாகரனை விடவும் நிறுவனங்களின் செயற்பாடுகள் அபாயகரமானவை. இயற்கை பசளைகளால் பயங்கரவாதிகளினால் வடக்கில் பாதுகாக்கப்பட்ட மண்ணை நாம் நாசமாக்குகின்றோம். நிறுவனங்களின் செயற்பாடு, கிருமிநாசினிகளின் பயன்பாடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவதானத்தைச் செலுத்த வேண்டும். கிருமிநாசினிகள் ஆபத்தானவையாகும்.
இரசாயனம் மனிதனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது. அபாயகரமானது. இதனால் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. அனுராதபுரம், பொலன்னறுவையில் உணவு பாதுகாப்பு முக்கியமானதாகும். அங்கு உணவு பயன்பாட்டினால் தாய், சிறுவர்கள், குடும்பத் தலைவன் உட்பட குடும்பத்தினரே பாதிக்கப்படுகின்றனர்.
இரசாயன பயன்பாட்டை பல நாடுகள் தவிர்த்து விட்டன. இதற்காக பசளையை நாம் பயன்படுத்த வேண்டும். சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் கியூபா போன்ற நாடுகள் கையாளும் புதிய தொழில்நுட்ப முறையைப் பின்பற்ற வேண்டும். இதன் மூலமே மண்ணைப் பாதுகாக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment