Wednesday, February 22, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஆதரவு தேடும் ராஜதந்திர சமர் ஆரம்பம்: ஜீ.எல். பீரிஸ்!

Wednesday,February 22,2012
ஜெனீவா::ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக பாரிய ராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.

ஜெனீவாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுடன் நடத்திய காலை உணவு சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள மேற்படி தீர்மானம் தீங்கற்றது எனவும் அது குறித்து இலங்கை கவலையடையத் தேவையில்லை எனவும் அமெரிக்கா தற்போது கூறியுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பான அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை இலங்கை ஆதரவிக்கவில்லை என அவர் கூறினார்.
இவ்விடயம் இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தும். இத்தீர்மானம் தீங்கற்றது என்ற அமெரிக்காவின் யோசனையை நாம் ஆதரிக்கமாட்டோம்' என அவர் தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தின் அடிப்படையில் அமெரிக்கா தனது தீர்மானத்தை வரைந்துள்ளது.

எனினும் இதை அமுல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவையென அமைச்சர் பீரிஸ் கூறினார்.

இந்த அறிக்கை 2011 டிசெம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின் பண்டிகைக் காலம் வந்தது. எமக்கு எதிரான தீர்மானமொன்று இருக்கும் என 2012 ஜனவரி 25 ஆம் திகதி எனக்கு அறிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் சிபாரிசுகளை நான்கு வார காலத்திற்குள் அமுல்படுத்த வேண்டுமென எதிர்பார்ப்பது எவருக்கும் நியாயமாக தோன்றுமா?" என அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்விடயத்தில் சர்வதேச தலையீடு பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடும் எனவும் உள்ளூர் தீர்வுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment