Friday, February 17, 2012

ஹெரோய்ன் விற்றவருக்கு மரண தண்டணை!

Friday, February 17, 2012
இலங்கை::ஹெரோய்ன் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டணை விதித்துள்ளது.

813.3 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்ததாகவும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகவும் குறித்த சாரதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபட்ட பஸ் ஒன்றின் சாரதியாக பணியாற்றிய போது அவர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டமை வழங்கு விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment