Friday, February 24, 2012

நாகையில் மூன்று அதிவேக படகு இன்ஜின்கள் பறிமுதல்:புலிகள் பயன்படுத்தியதா என விசாரணை!

Friday, February 24, 2012
நாகப்பட்டினம்::நாகை மீனவர் வலையில் சிக்கிய வெளிநாட்டு தயாரிப்பான, அதிவேக இன்ஜின்கள், விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதா என்பது குறித்து, கஸ்டம்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.நாகை மீன்பிடி துறைமுகத்தில் நேற்று காலை அதிவேக படகு இன்ஜின் மூன்று கிடப்பதாக, கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவற்றை கைப்பற்றி நாகை கஸ்டம்ஸ் அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர்.

கஸ்டம்ஸ் அலுவலர்கள் கூறியதாவது:நாகை, அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த முத்து துரை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, வலையில் மூன்று இன்ஜின்கள் சிக்கியுள்ளது. அவற்றை மீனவர்கள் கரைக்கு எடுத்து வந்து போட்டுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் படகு இன்ஜின்களை கைப்பற்றியுள்ளோம்.இந்த மூன்று இன்ஜின்களும்,6 சிலிண்டர்கள் உடையது. 200 குதிரைத்திறன் கொண்ட இந்த இன்ஜின்கள் சிறிய படகில் அதிவேகமாக செல்வதற்கு பயன்படுத்தப்படும்.

வெளிநாட்டு தயாரிப்பான இன்ஜின்கள் நமது நாட்டு மீனவர்கள் பயன்படுத்த வாய்ப்பில்லை. இலங்கையில் நடந்த சண்டையின் போது விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நீண்ட நாட்களாக தண்ணீரில் இன்ஜின்கள் கிடந்துள்ளதால், இன்ஜின்களில் கடல் சிப்பிகள் படிந்துள்ளது. உடனடியாக எந்த நாட்டு தயாரிப்பு என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு
அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment