Wednesday,February 22,2012அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சர் கெவின் ரட் இராஜிநாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் ஜுலியா கில்லாட்டை பதவி கவிழ்க்க அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், அவர் இராஜிநாமா செய்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு தொழில்கட்சியல் மேற்கொள்ளப்பட்ட சதியை அடுத்து தலைமைப் பதவியில் இருந்து கெவின் ரட் நீக்கப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.
தனது எதிகாலம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக தாம் இந்த வாரம் நாடு திரும்பவுள்ளதாக வொஷீங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கெவின் ரட் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment