Friday, February 24, 2012இலங்கை::இலங்கை::வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து முன்னெடுத்த கப்பம் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கர்கள் மொரட்டுவைப் பகுதியைச் சேர்ந்த வரத்தகர் ஒருவரிடம் இருந்து 50 ஆயிரம் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த வரத்தகர் தனது ஊழியர் ஒருவரிடம் 25 ஆயிரம் ரூபா அனுப்பி வைத்துள்ளதுடன் மொரட்டுவை ராவதாவத்தை பிரதேசத்தில் வைத்து எஞ்சிய தொகையை வழங்குவதாகவும் உறுதி வழங்கியுள்ளார்.
எஞ்சிய தொகையை வழங்கும்போது சந்தேகநபர்களை மொரட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் தமது மனைவியை கொலை செய்ததாக கூறப்பட்டு இலங்கையர் ஒருவர் கைது!
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் தமது மனைவியை கொலை செய்ததாக கூறப்பட்டு இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
பேர்த் நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் அவர்குள் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment