Monday, February 13, 2012

மெரினா கடலில் விநாயகர் சிலை!!!

Monday, February 13, 2012
சென்னை::மெரினா கடலில் விநாயகர் சிலை கிடைத்ததால் மக்கள் ஆர்வத்துடன் அதை பார்த்தனர். சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் கடல்நீர் உள்வாங்கி இருந்தது. இதனால் ஏராளமான மக்கள் ஆர்வமாக கடலில் குளித்தனர். அப்போது கடலின் பகுதியில் 2 அடி கொண்ட விநாயகர் சிலை இருந்ததை மக்கள் ஆர்வமாக பார்த்தனர்.

இது தங்க சிலையாக இருக்குமோ என்று மக்கள் சந்தேகப்பட்டு அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து விநாயகர் சிலையை மீட்டனர். அது 15 கிலோ கொண்டதாக இருந்தது. சிலை எப்படி இங்கு வந்தது. கடலில் விநாயகர் சிலை கரைக்கும் போது, இந்த சிலை கொண்டு வந்து போடப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment