Monday, February 13, 2012

அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு சிகரெட், மதுபானங்களை விற்பனை செய்த சீனப் பிரஜைக்கு 100,000 ரூபா அபராதம்!

Monday, February 13, 2012
இலங்கை::சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களை வைத்திருந்தமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களின் பேரில் சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கு கொழும்பு நீதிமன்றம் 100,000 ரூபா அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தது.

கொள்ளுப்பிட்டியில் உள்ள கடை ஒன்றிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ள இந்நபரிடமிருந்து 600 சட்டவிரோத சிகரெட்டுக்களையும் 47 வெளிநாட்டு சாரயப் போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதிவான் கனிஷ்கா விஜயரட்ன முன்னிலையில் இச்சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். தனது சொந்தப் பாவனைக்காக இவர் மதுபானங்களையும் சிகரெட்டுக்களையும் வைத்திருந்ததாகவும் இவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கட்சிக்காரர் சார்பில் வாதாடிய சட்டத்தரணிகளான பி.சி.டி.சில்வா, சுதர்சினி குணரட்ன தெரிவித்தனர். இதனைக் கவனத்திற்கொண்ட நீதிவான் சந்தேக நபருக்கு 100,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment