Friday, February 17, 2012இலங்கை::பிரபல பாடகர் சோனு நிகம் இன்று அதிகாலை இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.
கொழும்பில் நாளை நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காகவே அவர் நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரை வரவேற்பதற்காக பெருந்திரளானவர்கள் கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
1973 அம் ஆண்டு பிறந்த சோனு நிகம் பல்வேறு விருதுகளுக்கு பாத்திரமான பொலிவூட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியதன் மூலம் ரசிகர்கள் மனம் கவர்ந்த பாடகராக மாறினார்.
சோனு நிகம் தமது இசைப் பயணத்தை மூன்று வயதில் அரம்பித்திருந்தார்.
இதுவரை 40 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ள அவர், 40 க்கும் மேற்பட்ட பாடல் அல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment