Saturday, February 04, 2012இலங்கை::புளொட் அமைப்பின் லண்டன் கிளையினருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்குமிடையிலான சந்திப்பொன்று லண்டனில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் புளொட் லண்டன் கிளை சார்பில் சிவபாலன், தயா ஆகியோர் உள்ளடங்கிய குழுவினருடன், கவுன்சிலர் போல் சத்தியநேசன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இந்த சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள், தென்பகுதி அரசியல் சக்திகளின் போக்குகள், இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அரசுக்குமிடையில் இடம்பெற்றுவந்த பேச்சுக்களின் நிலைமைகள், இடம்பெயர்ந்த மக்களின் அவலங்கள், அவர்களின் வாழ்வாதார நிலைமைகள், மீள்குடியேற்றம், மீள்குடியமர்ந்தோரின் அடிப்படைத் தேவைகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவைகள், ஊக்குவிக்கப்பட்டு வரும் திட்டமிட்ட பெரும்பான்மையின குடியேற்றங்கள், காணி அபகரிப்புகள், இனப்பிரச்சினையில் இந்தியத் தரப்பின் நிலைப்பாடுகள், இனப்பிரச்சினைத் தீர்விற்கான அதிகாரப் பரவலாக்கலின் முக்கிய பகுதிகளான வடக்கு கிழக்கு இணைப்பு, காணி அதிகாரம், பொலீஸ் அதிகாரம், அரசாங்கம் தற்போது கூறிவருகின்ற தெரிவுக்குழு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment