Thursday, February 23, 2012இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு மேலதிகமாக அரசாங்கம் ஜெனீவாவில் சமர்ப்பிக்கவுள்ள மனித உரிமை செயற்றிட்டம் தொடர்பில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கவனயீர்ப்புப் பிரேரணை அறிக்கைக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக எதிர்க் கட்சித் தலைவர் பல்வேறு விடயங்களைத் தெரிவித்துள்ளார். அதற்கான பதிலை வழங்கும் அதிகாரம் பாராளுமன்ற சபாநாயகருக்கே உரியது என தெரிவித்த அமைச்சர்; எனினும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை அறிக்கை இதற்கு மேலதிகமாக மனித உரிமை தொடர்பிலான அரசாங்கத்தின் தேசிய திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு இன்று பதில் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் தமது அறிக் கையில், ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமையை பேரவை அமர்வில் அரசாங்கமானது மனித உரிமையைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது தொடர்பிலான இலங்கையின் செயற்றிட்டம் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. இதுதொடர்பில் சபைக்கு அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளிக்குமுகமாகவே அமைச்சர் தினேஷ் குணவர்தன நாளை அது தொடர்பில் சபையில் விவாதிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment