Wednesday, February 1, 2012

பொதுச்சந்தை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

Wednesday,February,01,2012
இலங்கை::கொழும்பு-வெள்ளவத்தையில் 240 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொதுச் சந்தை மற்றும் நான்கு மாடி வாகனத் தரிப்பிடத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

நாட்டிலுள்ள வாகன தரிப்பிடங்களில் நான்கு மாடிகளைக் கொண்ட முதலாவது வாகனத்தரிப்பிடம் இதுவாகும்.

வெள்ளவத்தைப் பொதுச்சந்தை கட்டடத் தொகுதியில் 83 கடைத் தொகுதிகள் அமைந்துள்ளதுடன், மரக்கறி, பழவகை விற்பனைக்காக 53 அறைகளும் மீன் விற்பனைக்காக 21 அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொது வாகனத் தரிப்பிடத்தில் ஒரே சமயத்தில் 95 வாகனங்களை நிறுத்தி வைக்கக் கூடிய வசதிகள் உள்ளன. நேற்றைய தினம் வெள்ளவத்தைப் பொதுச் சந்தையைத் திறந்து வைத்த ஜனாதிபதி அதன்பல பிரிவுகளையும் பார்வையிட்டார். பொதுச் சந்தையின் ஐக்கிய வர்த்தக சங்கத்தினர் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கி கெளரவித்தனர்.

நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாகாண ஆளுநர் அலவி மெளலானா, மாநகர மேயர் மொகமட் முஸம்மில் மாநகர எதிர்க்கட்சித் தலைவர் மிலிந்து மொரகொட முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment