Tuesday, February 21, 2012இலங்கை::சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்தமை அனுமதிப்பத்திரமின்றி பியர் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சீன உணவு விடுதியொன்றின் உரிமையாளருக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று 65,000 ரூபா அபராதம் விதித்தார்.
கொள்ளுப்பிட்டியிலுள்ள மேற்படி சீன உணவு விடுதியின் உரிமையாளரான லிங் சூ பின் கொள்ளுபிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
அவரின் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் சுதர்ஷினி குணரட்ன, தனது கட்சிக்காரர் அவரின் சொந்தப் பாவனைக்காக மேற்படி மதுபானத்தையும் சிகரெட்டுகளையும் வைத்திருந்ததாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment