Monday, February 13, 2012இலங்கை::கொழும்பு புதுக்கடை பகுதியில் கைதியொருவர் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருந்து நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த கைதி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிபிட்டார்.
கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த கைதி, சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் காவலில் இருந்ததாக அவர் மேலும் கூறினார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில், தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட 46 பேர் கைது!
போக்குவரத்தில் ஈடுபட்ட பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட மற்றும் இடையூறுகளை ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை மற்றும் ஜா-எல பகுதிகளில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மாத்தறை பஸ் தரிப்பிடத்தில் இருந்து பஸ்ஸொன்றை வெளியேற விடாது இடையூறு விளைவித்தமைக்காக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை நூபே பிரதேசத்தில் பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜ-எல பகுதியில் பஸ் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்.
இதேவேளை காலி பகுதியிலும் சில பஸ்களின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment