Friday, February 17, 2012

டக்ளஸ் தேவானந்தா விசாரிக்கப்படுவாரா?21ம் தேதி தெரியும்!

Friday, February 17, 2012
சென்னை::இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணையை சந்திக்கக் கோரி, தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, வரும் 21ம் தேதிக்கு, சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்தது.சென்னை சூளைமேட்டில், 1986ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில், திருநாவுக்கரசு என்பவர் பலியானார். இருவர் காயமடைந்தனர். சென்னையில் தங்கியிருந்த, இலங்கை போராளிகள் இயக்கத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 10 பேர் மீது, சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கு, சென்னை கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட்டில் ஆஜராகாததால், டக்ளஸ் தேவானந்தாவுக்கு "பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சென்று விட்டார். தற்போது, அமைச்சராக உள்ளார்.அமைச்சர் டக்ளஸ் மீதான "பிடிவாரன்ட்'டை அமல்படுத்தக் கோரி, ஐகோர்ட்டில் வழக்கறிஞர் புகழேந்தி மனு தாக்கல் செய்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்தியா கொண்டு வரவும், வழக்கை சந்திக்கவும் உத்தரவிடக் கோரி, மனு தாக்கல் செய்தார்.இம்மனுவை, நீதிபதிகள் மோகன்ராம், அக்பர்அலி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. புகழேந்தி சார்பில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், டக்ளஸ் சார்பில், வழக்கறிஞர் ராஜன், மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகினர். மனு மீதான வழக்கறிஞர்களின் வாதம், நேற்று முடிந்தது. இதையடுத்து, வரும் 21ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக, "டிவிஷன் பெஞ்ச்' தெரிவித்தது.

No comments:

Post a Comment