Wednesday, February 8, 2012

ரூ.1 கோடி மெமரி கார்டு ஏர்போர்ட்டில் சிக்கியது : இருவர் கைது!

Wednesday,February,08,2012
மீனம்பாக்கம்::ரூ.1 கோடி மதிப்புடைய மெமரி கார்டுகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கியது. இது தொடர்பாக பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ஹாங்காங்கில் இருந்து தாய்லாந்து வழியாக 3ஜிபி மெமரி கார்டுகளை பெருமளவில் ஒரு இளம்பெண் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சுங்க அதிகாரிகள் நேற்றிரவு 11.45 மணிக்கு பாங்காக்கில் இருந்து சென்னை வந்த தாய் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை தீவிரமாக சோதித்தனர். அப்போது டெல்லியை சேர்ந்த பூஜா (29), அசோக் ரத்தன் (56) ஆகியோர் மீது சந்தேகம் வலுத்தது. அவர்களது உடமைகளில் எந்த பொருட்களும் இல்லை. பின்னர், தனித்தனி அறைகளில் வைத்து சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, பூஜா தனது இரண்டு கால்கள் முதல் தொடை வரை ஏராளமான மெமரி கார்டுகளை ஒட்ட வைத்து அதற்கு மேல் மெல்லிய கால் உறையை சுற்றி
யிருந்தார். அதை எடுத்து பார்த்தபோது, 34 ஆயிரம் மெமரி கார்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் அசோக் ரத்தனின் இரு கால்களிலும் 31 ஆயிரம் மெமரி கார்டுகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி. இதையடுத்து இருவரையும் கைது செய்து மெமரி கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
அசோக் ரத்தன், ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். அது நலிவடைந்ததால் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரிடம் உதவியாளராக பணியாற்றி வருபவர்தான் பூஜா. இவரது கணவர் தல்வார், 2 குழந்தைகள் டெல்லியில் வசிக்கின்றனர்.

No comments:

Post a Comment