Tuesday, February 14, 2012இலங்கை::கொள்ளுப்பிட்டியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதியை நிர்வகித்ததுடன் அதை நடத்த உதவிய குற்றச்சாட்டில் 12 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றமொன்று நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தேடுதல் உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
முதலாவது சந்தேக நபர், ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதியை நடத்தியதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய 11 பெண்களும் விபசார விடுதியை நடத்த உதவியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த முற்றுகையை மேற்கொண்ட, மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பெண்ணொருவரைப் பெற்றுக்கொள்வதற்காக 3000 ரூபா வழங்கியதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் அஜித்த பத்திரன, மதுரா வெல்கம மற்றும் தீமணி பெத்தேவெல ஆகியோர் தமது கட்சிக்கார்கள் மீதான குற்றச்சாட்டை நிராகரித்ததுடன் அவர்கள் அனுமதிப்பத்திரம் பெறப்பட்ட ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றை நடத்தியதாக கூறினார்.
அதன்பின் சந்தேக நபர்களை பெப்ரவரி 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கனிஷ்கா விஜேரட்ன உத்தரவிட்டார்.
பெரியகுளம் பகுதியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த ஆறு பேர்கைது!
உப்புவெளி, பெரியகுளம் பகுதியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த ஆறு பேர்கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் புராதன இடமொன்றில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்மூலம் சில மாணிக்க கற்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவும் விசாரணைகளி்ன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment