Thursday,January 05, 2012இலங்கை::ஜனாதிபதியின் காலடியில் சரணாகதியடைந்து முதலமைச்சராகியவர் சம்பந்தனை விமர்சிக்கிறார்: மாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலடியில் சரணாகதியடைந்து முதலமைச்சராகிக் கொண்டவர் எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயாவைப்பார்த்து பரிகாசம் செய்கின்றார். அவரைப்பார்த்து விமர்சனம் செய்கின்றார். எமது தலைவர் சம்பந்தனின் ஆற்றலையும் அவரின் அறிவையும் இவர் சரியாக விளங்கிக்கொள்ள வில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மாவையின் செய்திக்கான பதில்
கிழக்கு மாகாண முதலமைச்சரான திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதியின் காலடியில் சரணடைந்து முதலமைச்சா பதவியினைப் பெற்றதாக சோனாதியோ அன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு உறுப்பினரோ விமர்ச்சிப்பதற்கு உங்களுக்கு இருக்கின்ற தகுதி என்ன?
தந்தை செவ்வாவின் வாரிசுகளென தம்பட்டமடித்த உங்கள் அணியினர் அனைவருமே சர்வதேசப் பயங்கரவாதியான பிரபாகரனுக்கு பாதநமஸ்காரம் பண்ணியதனாலேயே இன்றுவரை பாராளுமன்றம் சென்றுள்ளீர்கள் என்பதனை உம்மால் மறுக்கமுடியுமா?
1989ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தோதலில் திருமலை மாவட்டத்தில் கட்டுப்பணத்தினை இழந்த சம்பந்தன் (10.10.2000ல்) இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட முடியாது கொழும்பில் சந்திரிகாவின் தயவில் வாழ்க்கை நடத்தியமை உமக்கு தெரியுமா?
பின்னர் 1994ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் தோல்வியே உங்களின் ஐயாவிற்கு கிடைத்த பரிசாகும். இந்நிலையிலேயே பதவி வெறிகாரணமாக உங்கள் ஐயா பிரபாகரனின் காலடியில் சங்கமமாகினார்.
பிரபாகரனுக்கு பாதநமஸ்காரம் பண்ணிய நிலையில் இடம்பெற்ற தேர்தலில்கூட உங்கள் ஐயா பெற்ற வாக்குகள் ஆக மொத்தம் (40,110) மட்டுமே ஆனால் முதல் தடவையாக தேர்தலில் நின்ற சந்திரகாந்தன் பெற்ற வாக்குகள் (41,936) என்பதுகூட உமக்கு தெரியுமா?
உங்களின் ஐயா பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டமையை நீர் மறுக்கமுடியுமா? (மஹாவலி)
No comments:
Post a Comment