Thursday, January 5, 2012

கலவை உறுதித்தன்மை கண்டறிய முல்லைப் பெரியாறு அணையில் 5 இடங்களில் துளையிட்டு ஆய்வு!

Thursday,January 05, 2012
கூடலூர்:முல்லைப் பெரியாறு அணையின் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட கலவையின் உறுதித்தன்மை கண்டறிவதற்காக மத்திய மண்ணியல் துறை அதிகாரிகள் 5 இடங்களில் ஆழ துளையிட்டு மண் மாதிரிகளை சேகரிக்கும் பணியை இன்று துவக்கினர். நூற்றாண்டுகளை கடந்த முல்லைப் பெரியாறு அணை அக்கால தொழில்நுட்பப்படி சுருக்கி, சுண்ணாம்பு, கருங்கற்களால் கட்டப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி 542 மெட்ரிக் டன் சிமென்ட் உபயோகப்படுத்தி அணை பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அணை போதிய வலுவில்லாமல் இருப்பதாகவும், எந்நேரமும் உடையும் அபாயம் உள்ளதாகவும் கேரளா தரப்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்றம் அமைத்த உயர் அதிகாரக்குழுவின் உத்தரவின் பேரில் சில மாதங்களுக்கு முன் மத்திய மண்ணியல் ஆய்வு நிலைய இயக்குநர் முராரி ரத்தினம் தலைமையில் அணையின் பலம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக 1200 அடி நீளமுள்ள அணையின் மேற்பகுதியில் ஆழ்துளை இயந்திரங்களால் துளையிட்டு மண் மாதிரிகளை சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. இது தவிர பேபி அணையின் ஒரு பகுதி, மற்றொரு பகுதி என மேலும் இரு இடங்களும் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடங்களில் துளையிட்டு மண் மாதிரிகளை சேகரிப்பது தொடர்பாக புனேயை தலைமையிடமாக கொண்ட மத்திய நீர்மின் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் டாக்டர் தேசாய் தலைமையிலான குழுவினர் அணைப் பகுதியில் ஆய்வு நடத்தினர். கேபிள் ஆங்கரிங் செய்யப்பட்ட இடத்தை தவிர்த்து பிற இடங்களில் இயந்திரத்தால் துளையிட தேர்வு செய்யப்பட்ட இடங்களை பார்வையிட்ட அவர்கள் இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து தமிழக, கேரள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் மகாராஷ்டிர அரசின் டபோடி ஒர்க்ஷாப் பொறியாளர் சாங்லி அந்த இடங்களை கடந்த வாரம் பார்வையிட்டு உறுதி செய்ததையடுத்து மகாராஷ்டிர அரசின் டபோடி ஒர்க்ஷாப்பில் இருந்து துளையிடும் இயந்திரங்கள் அணைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. இதையடுத்து நேற்று மத்திய மண்ணியல் துறை உயர் அதிகாரிகள் இந்த ஆய்வை தொடங்கினர். இந்த ஆய்வு ஒரு சில நாட்கள் நீடிக்கும்.

No comments:

Post a Comment