Thursday, January 12, 2012

பழங்குடி பெண்களை நிர்வாண நடனமாட வைத்த போலீஸ் அதிகாரி!

Thursday, January 12, 2012
புதுடெல்லி::அந்தமானில் வாழும் ஜவாரா பழங்குடியின பெண்களை சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக போலீஸ் அதிகாரி ஒருவர் அரை நிர்வாணமாக நடனமாட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தமான் தீவில் உள்ள காட்டுப் பகுதிகளில் ஜவாரா பழங்குடியின மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த தீவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளை மகிழ்விப்பதற்காக, சுற்றுலா நிறுவனங்கள் அவர்களை இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன.

இந்த நிலையில், சமீபத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற போலீஸ் அதிகாரி ஒருவர், பழங்குடியின பெண்களை அரை நிர்வாணத்தில் நடனமாட வைத்து சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்தி இருக்கிறார். இதை சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இதை ஆங்கில பத்திரிகை ஒன்று தனது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பழங்குடியின பெண்களை கேவலப்படுத்திய இந்த சம்பவத்தை மத்திய அரசு கடுமையாக கண்டித்துள்ளது. இது பற்றி மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் கே.பி. சிங் அளித்த பேட்டியில், ‘‘இந்த சம்பவம் மிகவும் அசிங்கமானது; அருவருப்பானது. இந்த சம்பவத்தை மன்னிக்கவே முடியாது. இந்த தவறை செய்தவர்கள் கடுமையான தண்டனைக்கு உரியவர்கள்’’ என்றார். மத்திய சட்டம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ‘‘பழங்குடியின பெண்களை கட்டாயப்படுத்தி நடனமாட வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment