Thursday, January 12, 2012

சட்டவிரோத வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் தாய்லாந்துப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை கைது!

Thursday, January 12, 2012
இலங்கை::சட்டவிரோத வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் தாய்லாந்துப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை கைது:-

வெளிநாட்டு நாணயத் தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச்செல்ல முயற்சித்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சட்டவிரோதமாக எடுத்துச்செல்ல முயற்சித்த 35 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் சந்தேகநபர் பெங்கொக் நகருக்கு தப்பிச் செல்ல தயாரானபோது விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண்ணின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க டொலர்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments:

Post a Comment