Friday, January 6, 2012

புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரை கனடாவிலும் அச்சிடப்பட்டு;ள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Friday, January 06, 2012
கனடா::புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரை கனடாவிலும் அச்சிடப்பட்டு;ள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளினால் கோரப்பட்ட தமிழீழ வரைப்படத்தை தாங்கிய தபால் முத்திரைகள் கனடாவில் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் ஒட்டோவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஓர் இலங்கை அமைப்பு இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. கனடாவிற்கான இலங்கை ஐக்கிய தேசிய ஒன்றியம் என்ற அமைப்பு இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கனடாவில் இயங்கி வரும் புலிகளின்
தமிழ் இளையோர் அமைப்பு இவ்வாறு புலிச் சின்னங்களைத் தாங்கிய முத்திரைகளை அச்சிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழர் இன ஒடுக்குமுறை எனக்கு ஞாபகம் இருக்கின்றது என தபால் முத்திரையில் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனேடிய பொதுவிவகார மற்றும் அரசாங்க சேவைகள் அமைச்சர் ரோனா அம்ரோஸிடம் இந்தத் தபால் முத்திரை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் எழுத்து மூல முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனேடிய தபால் திணைக்களத்தின் சேவை துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக கனடாவிற்கான இலங்கை ஐக்கிய தேசிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

தனிப்பட்ட சில விடயங்களை நினைவு கூறும் நோக்கில் கனேடிய தபால் சேவை வழங்கிய சந்தர்ப்பத்தை சிலர் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த தபால் முத்திரையை உடனடியாக ரத்து செய்யுமாறு கனேடிய அரசாங்கத்திடம், அந்த அமைப்பு கோரியுள்ளது.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட தரப்பினருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமேனவும் கோரியுள்ளது.

No comments:

Post a Comment