Thursday, January 12, 2012விழுப்புரம்:"தி.மு.க., இளைஞர் அணிக்கு, மாநில அளவிலும், வயது நிர்ணயிக்கப்பட உள்ளது. நானே கூட பொறுப்பிலிருந்து விலக வேண்டிவரும்' என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.
விழுப்புரத்தில் நடந்த, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் தேர்வை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: தி.மு.க., இளைஞரணி தற்போது மந்தமான சூழலில் உள்ளது, இதில் மாற்றத்தை ஏற்படுத்தி முனைப்புடன் செயல்படுத்திட தலைவர், பொதுச்செயலர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். நகர, ஒன்றிய, பேரூர் பகுதி இளைஞரணி நிர்வாகிகளுக்கு படிவங்கள் வழங்கி தேர்தலுக்கு அழைத்துள்ளோம். ஒவ்வொரு பதவிக்கும், 10 முதல் 20 பேர் வரை பெயர் கொடுத்துள்ளனர். இளைஞரணி பொறுப்பாளர்கள், 30 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்சிப் பொறுப்பிற்கு செல்லுங்கள். மாவட்ட பொறுப்பாளர்களுக்கு, 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதே போல் மாநில அளவிலும் வயது நிர்ணயிக்கப்பட உள்ளது. நானே கூட பொறுப்பிலிருந்து விலக வேண்டி வரும். இருந்தாலும் தொடர்ந்து இளைஞரணி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். தேர்வில் பங்கேற்பவர்கள் வயது சான்று காட்ட வேண்டும். அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கேற்ப மதிப்பெண்கள் வழங்கி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். அவர் தான் பொறுப்பில் உள்ளார் என ஒதுங்காமல், ஒவ்வொருவரும் இளைஞரணியின் செயல்வீரர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட வேண்டும். கட்சி அமைப்பின் தேர்தல் நடக்க உள்ளதால், இதற்காக உறுப்பினர் சேர்க்கையும் நடக்க உள்ளது. நாம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து சமுதாயப் பணிகளில் ஈடுபடுவோம். மற்றவர்கள் போல் கோட நாட்டிற்கு ஓடிப்போக மாட்டோம். ஆட்சியில் இருந்ததைவிட இப்போது தான் கட்சி எழுச்சியுடன் உள்ளது. இவ்வாறு தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.
அமைப்பாளர் பெயர் தெரியாதவர் வெளியேற்றம்: விழுப்புரத்தில் நடந்த தி.மு.க., இளைஞரணிக்கான நேர்காணலில், அமைப்பாளர் பெயர் தெரியாத தொண்டர் வெளியேற்றப்பட்டார். விழுப்புரத்தில், தி.மு.க., மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நேற்று நடந்தது. கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். நகர, ஒன்றிய வாரியாக இளைஞர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேர்காணலின் போது வயது சான்றுகளை வாங்கி பார்த்த ஸ்டாலின், சில கேள்விகளை கேட்டார். 30 வயதை கடந்து ஒரு மாதமான நபரை கூட ஏற்க முடியாதென வெளியே அனுப்பினர். நேர்காணலின் போது, இளைஞரணி அமைப்பாளர் (ஸ்டாலின்) பெயர் தெரியாமல் விழித்தவரை, "நீங்கள் வெளியே போகலாம்' என, ஸ்டாலின் கூறினார். இதேபோல், சரளமாக அவர் கேட்ட கேள்விகளுக்கு உடன்பிறப்புகள் சளைக்காமல் பதிலளித்தனர்.
மக்கள் பணிகளை திமுக செய்து வருகிறது!
விழுப்புரம் : ஆட்சி பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளை திமுக தொடர்ந்து செய்து வருகிறது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றிய நகர, பேரூர் இளைஞரணி நிர்வாகிகள் நேர்முக தேர்வு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. நேர்முக தேர்வை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தி இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு செய்தார். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக இளைஞரணி 1980ல் மதுரையில் ஆரம்பிக்கப்பட்டது. திமுக வளர்ந்ததற்கு காரணம் இளைஞரணி மட்டும்தான். இதனை மற்ற அணியில் இருப்பவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். திமுகவில் தொமுச, தொண்டரணி, நெசவாளர் அணி எத்தனையோ துணை அமைப்புகள் உள்ளன. ஆனால், அனைத்துக்கும் முன்னோடியாக இருப்பது திமுக இளைஞரணி மட்டும்தான். இன்றைக்கு உள்ள மந்தமான நிலையை மாற்றி முனைப்புடன் செயல்பட திமுக தலைவரும், பொதுச்செயலாளரும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒரு இளைஞரணி அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளைஞரணியினர் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் இடம் கொடுக்காமல் இளைஞரணியின் அங்கமாகவும், சிங்கமாகவும் வெற்றியின் சின்னமாகவும் இருக்க வேண் டும். ஆட்சி பொறுப்பில் திமுக இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளை செய்து வருகிறது. இவ்வாறு மு.க.ஸ்டா லின் பேசினார்.
No comments:
Post a Comment