Thursday, January 12, 2012இலங்கை::வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான மேன்முறையீட்டு மனுவை விசாரணைசெய்யும் நீதவான்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பில் அளிக்கப்பட்டதீர்ப்பை சவாலுக்கு விடும் வகையில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளைக் கொடி வழக்கில் சரத் பொன்சேகா குற்றவாளி எனதீர்ப்பளிக்கப்பட்டதுடன், அவருக்கு மூன்றாண்டு கால கடூழிய சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதவான்கள் ஐவர் அடங்கிய நீதவான் குழாமொன்றுமேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்யவுள்ளது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, நிமால் காமினிஅமரதுங்க, கே.ஸ்ரீபவன், பீ.ஏ.ரத்நாயக்க மற்றும் பிரியசாத் ஆகிய நீதவான்கள் இந்தவழக்கை விசாரணை செய்கின்றனர்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ம் திகதி மனு தொடர்பான விசாரணைகள்நடத்தப்பட உள்ளன.
சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவினால் கடந்தடிசம்பர் மாதம் 1ம் திகதி மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment