Monday, January 2, 2012

ஜேவிபி கிளர்ச்சிக் குழுத் தலைவரான குமாரவின் மனைவி பிள்ளைகள் விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை!

Monday, January 02, 2012
இலங்கை::(ஜேவிபி) மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சிக் குழுத் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் எனப்படும் குமார மஹத்தயாவின் மனைவியான சம்பா சோமரட்ன மற்றும் அவருடைய இரு பிள்ளைகள் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் இவர்கள் வருட இறுதி விடுமுறைக்கு இலங்கை வந்துவிட்டு மீண்டும் வெளிநாடு செல்ல இன்று அதிகாலை விமான நிலையத்திற்குச் சென்ற வேளை அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் செய்திப் பிரிவு பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியபோது, 47 வயதுடைய பெண்ணும் இரு பிள்ளைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

இன்று அதிகாலை 1 மணியளவில் குறித்த பெண்ணும் பிள்ளைகளும் பெங்கோக் நோக்கி பயணிக்கவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் இவர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment