Tuesday, January 31, 2012

ராஜீவ் கொலையாளிகள் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான வழக்கு:விசாரணையை ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்!

Tuesday, January 31, 2012
சென்னை::பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுவின் பேரில், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன், ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் கருணை மனு தொடர்பாக முல்லர் என்பவர் தொடர்ந்த மற்றுமொரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு சாந்தன் உள்ளிட்ட மூவரின் வழக்கறிஞர்களும் விசாரணையை தள்ளி வைப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றனர். இதனையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment