Tuesday, January 31, 2012

பிரேக் பிடிக்காததால் தாறுமாறாக ஓடிய பஸ் : தி.நகரில் பரபரப்பு!

Tuesday, January 31, 2012
சென்னை::பிரேக் பிடிக்காததால் தாறுமாறாக ஓடிய பஸ், சென்டர்மீடியனில் மோதி நின்றது. இதில் பயணிகள் தப்பினர். 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அரசு பஸ் 47ஏ திருவான்மியூரில் இருந்து ஐசிஎப் நோக்கி காலை 8 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது. இதில் 30க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பாலத் தில் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென பிரேக் பிடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பஸ்சை நிறுத்த டிரைவர் ரஜினிகாந்த் ஹேண்ட் பிரேக் மூலம் தீவிரமாக முயற்சித்துள்ளார்.

பாலத்தின் கீழே இறங்கியதும் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்ற 11ஏ (தி.நகர்-வள்ளலார் நகர்) பஸ் மீது லேசாக மோதியது. பின்னர் சென்டர் மீடியன் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் டிரைவர்கள் ரஜினிகாந்த், லட்சுமணன் (11ஏ பஸ்) ஆகியோருக்கும், பயணிகள் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் அரசு பஸ்களை அப்புறப்படுத்தி, வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.

No comments:

Post a Comment