Tuesday, January 31, 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த ஐ.தே.க ஆதரவு வழங்கும்!

Tuesday, January 31, 2012
இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.இதனை தருஸ்மன் அறிக்கை எனவும் குறிப்பிடலாம் குறித்த அறிக்கையின் சிபார்சுகனை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட இலங்கை அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக் ஆணைக்குழுவை நியமித்தமையும் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தாது அவற்றை ஒரு புறத்தில் வைத்துவிட்டு தெரிவிக்குழுவொன்றை நியமிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் என்ன செய்ய முயற்சிக்கின்றனர் என்று கேள்வியெழுப்பிய பொதுச் சொயலாளர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தவதில் கவனம் செலுத்துமாறும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசிகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான கலந்துரையாடலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment